Friday, March 20, 2009

ஹோமர் புறா

இந்தவகை புறாக்கள் நீண்ட தூரம் பறக்கும் வல்லமை பெற்றவை. பந்தயங்களில் பயன்படுத்தபடும். சிறு குஞ்சிலேயே பயிற்சி கொடுத்து வளர்க்கப்படும்.ஒரு வாரக் குஞ்சியாக இருக்கும்போது அதன் காலில் உரிமையாளர் பெயர் பொறிக்கப்பட்ட வளையம் ஒன்று மாட்டப்படும்.பந்தயங்களுக்காகவே, சிறப்பான உணவுக் கொடுத்து வளர்க்கப்படும். ஆரம்பகட்டங்களில் பறக்கவிடப்பட்டு படிப்படியாக தூரங்கள் அதிகரிக்கப்படும். பின்பு அவை குறைந்த நேரத்தில் அதிக தூரத்திலிருந்து வரும்படி பயிற்சிக் கொடுக்கப்பட்டு பந்தயத்தில் விடப்படும். எந்த புறா முதலில் பறந்து வந்து அதன் கூட்டை அடைகிறதோ அந்த புறா வெற்றியடைந்தாகக் கருதப்படும்.புறா பறக்கவிடுமுன் அதற்கு வேண்டிய உணவு, தண்ணீர் கொடுத்து அனுப்படும், காரணம் அவை நீண்ட தூரம் பறக்கும் போது சோர்வடையாமல் இருக்க. கீழக்கரையைச் சேர்ந்த சஃபியுதீன் புறா 1200 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து வந்து சாதனை படைத்தது. இந்த தூரத்தைக் கடக்க எடுத்துக்கொண்ட நேரம் 21 மணி நேரமட்டுமே.

மற்ற இன பூனை வகைகள்















பெங்கால் இனம், அபிசினியன் இனம்

Friday, February 27, 2009

ஆடுகளின் புகைப்படம்



கோடைகாலத்தில் கால்நடைகளின் பராமரிப்பு

கோடையில் கால்நடைகள் பராமரிப்பு:
கோடை காலத்தில் அதிக அளவு வெப்பம் தாக்குவதால் கால்நடை வளர்ப்பில் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன।க் குறிப்பாக எல்லா கால்நடைகளிலும் அதன் உற்பத்தி பாதிக்கப்படுகின்றது। ஆனால் சில தகுந்த மேலாண்மை முறைகளைக் கடைபிடித்தால் ஓரளவு சீரான உற்பத்தியை வருடம் முழுவதும் நாம் பெற முடியும்। கால்நடைகளில் சிறந்த உற்பத்தி கிடைக்க வேண்டுமானல் அவற்றிற்கு இயற்கையிலேயே தேவைப்படும் அடிப்படை வசதிகளை அமைத்துத் தர வேண்டியது அவசியமாகும்।கால்நடைகளின் உயரிய உற்பத்தி திறனை உள்ளடக்கிய மரபு பண்பு, சுற்றுப்புற சூழல் மற்றும் அவற்றிற்கு அளிக்கப்படும் பராமரிப்பு ஆகிய மூன்றும் ஒரு முக்கோண்ம் போன்று ஒன்றுக்கொன்று இணைந்து செயல்பட்டு அவற்றின் திறனை வெளிப்படுத்த வழிவகை செய்கின்றன।இவற்றில் ஏதேனும் ஒன்று பாதிக்கப்பட்டால் கூட உற்பத்திக் குறைவினை உண்டாக்கி விடுகின்றன।
கோடையில் கால்நடைகளைப் பாதிக்கும் முக்கிய காரணிகள்:

ஒவ்வொரு உயிரிகளுக்கும் அவற்றின் அனைத்து உடற் செயல்பாடுகளும், எந்தவிதமான பாதிப்புமில்லாமல் சரியாக இயங்குதல், அவற்றின் உற்பத்திக்கு மிக அவசியமாகும்
।இவற்றிற்கு அவற்றின் சுற்றுப்புற சூழ்நிலையில் நிலவும் வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம், அவற்றின் வேகம், காற்றோட்ட வசதி, வெளிச்சம் மற்றும் ஒலி போன்ற காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றது।மேலும் இவை சீராக இருக்கும்படி கால்நடைகளின் சுற்றுப்புறச்சூழலைக் கவனிக்க வேண்டியது அவசியமாகும்।

கோடைகால பராமரிப்பு என்றால் என்ன?
கோடை காலத்தில் கால்நடைகளை எப்படி நாம் சீராக பராமரிப்பது என்பது தான், கோடைகாலப் பராமரிப்பாகும்।கோடைகாலத்தினால் ஏற்படும் பாதிப்பு நம் நாட்டின் கால்நடைகளை விட உயரிய அயல்நாட்டு இன கால்நடைகளிலும், கலப்பினங்களிலும் தான் அதிகம்। நம் நாட்டு இன கால்நடைகள் இந்த சூழ்நிலைகளைத் தாங்க வல்ல உடலமைப்பினைக் கொண்டுள்ளது।உதாரண்ம், சிறிய உடல், மெலிந்த திரேகம், கால்நடைகளில் திமில், நீண்ட உடலமைப்பு, காது மற்றும் நீண்ட முகம், போன்றவையாகும்। இருப்பினும் உயரிய கால்நடைகள் முற்றிலுமாக குளிர் பிரேதேசற்கு ஏற்றவாறு உடலமைப்பு உடையதால் தான் கோடையின் தாக்குதல் அதிகமாக உள்ளது।அதே போலவற்றின் பழக்கமும் காணப்படுகிறது।

மேலாண்மை முறைகள்:
அதிக வெப்பம், அதிக நேர சூரிய ஒளி, அதிகரித்த அல்லது தேவையை விடக்குறைந்த காற்றின் ஈரப்பதம் மற்றும் வேகம் ஆகியவற்றை கூடுமானவரை சிறந்த மேலாண்மை முறைகள் மூலம் கட்டுப்படுத்த்லாம்। கால்நடைகளின் கொட்டகையில் சில மாறுபாடுகள் செய்வதன் மூலமும் மற்றும் வளர்ப்பு முறைகளை மாறுதல் செய்வதன் மூலமும், மேய்ச்சல், தீவனமளித்தல் போன்ற செயல்களில் கால நேரத்தை மாற்றுவதன் மூலமும் கோடைகால காரணிகள் கால்நடைகளைத் தாக்குவதிலிருந்து கட்டுப்படுத்தலாம்।

கொட்டகை மேலாண்மை:
நம் நாட்டிற்கு ஏற்றார்போல் அமைய, எப்போதுமே கொட்டகையின் நீளவாக்கு கிழக்கு மேற்க்காக அமைக்கப்படவேண்டும்। இல்லையேல் கொட்டைகையினுள் அதிக வெப்பம் தாக்கி பாதிப்பை ஏற்படுத்தும்।மழை நீர் தங்கா வண்ணம், நல்ல காற்றோட்ட வசதி ஏற்படுத்தும் வகையில் மேடான பகுதியில் கொட்டகை அமைக்க வேண்டும்। கொட்டகையின் மொத்த அகலம் 25-30 அடிக்கு மேல் அமையக்கூடாது, இல்லையேல் கொட்டைகயினுள் குறுக்கு காற்றோட்டம் தடைபடுவதோடு கொட்டைகையினுள், காற்றில் மாசுகள், வெப்பம் மற்றும் ஈரப்பதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது। பக்க சுவர்கள் கம்பி வலைக் கொண்டு சுற்றிலும் பதுகாப்பு அமைத்துக் கொள்ளலாம்। இல்லையேல் காற்றோ ட்ட அளவு குறைந்து கொட்டகயினுள் சாதகமற்ற சூழல் உருவாகும்।
கூரைகளை, வெப்பம் கடந்து செல்லாதவாறு அமைக்க ஓலை, வைக்கோல் போன்றவற்றைக் கொண்டு அமைக்கலாம்। அல்லது கல்நார், உலோகத்தகடுகள் கொண்டு அமைத்து அதன் மேல் வைக்கோல், தட்டை, அல்லது தென்னகீற்று, பனை ஓலை கொண்டு வெளிபுறத்தை மூடுவதன் மூலம் கொட்டகையினுள் வெப்பத்தைக் குறைக்கலாம்।
கூரையின் மேல் படர்கின்ற செடிகளான பசலிக்கொடி, கோவைக்கொடி மற்றும் படர்கின்ற அழகு செடிகளைக் கொண்டு , படரவிட்டு வெப்பத்தை குறைக்கலாம்। அதே சமயம் பாம்பு, பல்லி,எலி, பூச்சிகள் தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது।
ஒவ்வொருக் கொட்டகையும் 30 அடி இடைவெளி விட்டு கட்டவேண்டும் இல்லையேல் இது காற்றோட்டத்தை தடுக்கும்। கோடை காலங்களில் கொட்டகைச் சுற்றி நிழல் தரும் மரங்களை வளர்த்து வெப்பத்தை தடுக்கலாம்। மதிய வேளையில் கொட்டகை மேல் தண்ணிர் தெளித்து வெப்பத்தை குறைக்கலாம்।

தீவன மேலாண்மை:


பொதுவாகவே கால்நடைகள் கோடையில் உண்ணும் தீவன அளவு குறைந்து விடுகின்றது। தண்ணிரின் தேவை அதிகரிக்கின்றது। மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் நேரத்தை மாற்றிவிட வேண்டும் । முற்பகல் 11.00 முதல் பிற்பகல் 3.30 வரை நேரடி சூரிய வெப்பத்திலிருந்து காக்கும் பொருட்டு மேய்ச்சலுக்கு விடாமல் நிழலில் அடைப்பது சிறந்தது

Thursday, February 26, 2009

பெர்சியன் பூனை




என்னிடமுள்ள பெர்சியன் வெள்ளை நிற பெண் பூனை, தன்னைப்போலவே வெண்மை நிற மூன்று குட்டிக்ளை ஈன்று உள்ளது।குட்டிகள் பிறந்த தேதி:25।02,2009பெர்சியன்பூனையின் கர்ப்பகால அளவு 62-65 நாட்கள் ஆகும்। நவம்பர் 19ஆம் தேதி சினைப்படுத்தப்பட்டு பிப்ரவரி 25ஆம் தேதி குட்டி ஈன்றது।என் நண்பர் ஒருவரிடத்திலுள்ள மஞ்சள் நிற பெர்சியன் ஆண் பூனை மூலம் இன விருத்தி செய்யப்பட்டது।பிறந்த மூன்று குட்டிகளும் தாய் பூனையைப் போல் வெண்மை நிற கொண்டதாக உள்ளது।இரண்டு பெண் குட்டிகளும், ஒரு ஆண் குட்டியும் பிறந்து உள்ளது।பெரும்பாலும் இவை இறக்குமதி செய்யப்பட்ட உணவுகளையை விரும்பி உண்ணுங்கின்றன। இங்குள்ள உணவுகளை விரும்பி உண்ணுவதில்லை।பொதுவாக இவை சாதுவானவை। எவ்வளவு சீண்டினாலும் கோபப்படுவதில்லை।சிறு குழந்தைகள் பொம்மையாக நினைத்து விளையாடுவதற்கு ஏற்றது।இதன் சந்தை விலை 15000-150000 வரை உள்ளது।பொம்மைமுகம் போன்ற தோற்றமுடைய பெர்சியன் பூனை விலை அதிகமானது.

Thursday, January 29, 2009

ஆடு இனங்கள்

ஆடு இருவகைப்படும் , !) வெள்ளாடு 2) செம்மறியாடு
தமிழ் நாட்டில் காணப்படும் வெள்ளாட்டினங்கள்
கன்னி ஆடுகள், கொடிஆடுகள், சேலம்கறுப்பு, பள்ளையாடுகள்
நம் நாட்டின் மற்ற இடங்களில் காணப்படும் மற்ற இனங்கள்:
ஜமூனாபாரி, பீட்டல், சரோகி, காஷ்மீரி, பார்பாரி, சுர்த்தி, ஓஸ்மானாபடி, தலைச்சேரி (மலபாரி), மார்வாரி, பாஸ்மினா, ஜக்ரனா, வங்காளக் கறுப்பு, சிரேஹி, ஜலவாடி, கோஹல்வாடி, மேசனா, ஆஸ்மானபடி, குட்சி, சங்கம்னரி, கட்டி, ஷேகு, சந்தங்கி முதலியன.
வெளிநாட்டி்ல் காணப்படும் இனங்கள்:
அங்கோரா, ஆலீபைன், ஆங்கிலோ நூபியன், போயர், சானன், டோகன்பர்க், சீன நீலம், முதலியன।

1)கன்னி ஆடுகள்: இவை பெரும்பாலும் தென் மாவட்டங்களில் காணப்படுகின்றன।குறிப்பாக சிவகாசி, விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர், விளாத்திக்குளம், இராமநாதபுரம் பகுதிகளில் அதிகமாகவும், குறிப்பாக கரிசல் நிலம், குன்றுகள் நிறைந்த பகுதிகளில் நிறைவாக காணப்படுகின்றன। இந்த ஆட்டினத்தை இன காண்பது எளிது, முகத்தில் வெண்மை கோடு அல்லது செங்கோடு வயிற்று பகுதியில் வெண்மையாகவோ, அல்லது செந்நிறமாகவோ காணப்படும்। முகத்தில் வெண்மைக்கோடு கொண்டுள்ள ஆடு பால் கன்னி என்றும், செந்நிறக்கோடு கொண்டுள்ள ஆடு செங்கன்னி என்றும் அழைக்கப்படும்। கன்னி கிடாஆடுகள் 85 செ।மி। உயரம் 75 நீளம் இருக்கும்। சராசரியாக 50 கிலோ உடல் எடை இருக்கும்। பெண் ஆடுகள் 80 செ।மி.உயரம், 60।செ।மி.நீளம் சராசரியாக 35 கிலோ உடல் எடை கொண்டதாகக் காணப்படும்। வறட்சி பகுதியில் வாழ வல்லமை பெற்றவை।இவ்வகை ஆடுகள் பொதுவாக இரண்டு அல்லது மூன்று குட்டிகள் ஈனும் அரிதாக நான்கு, ஐந்து குட்டிகள் கூட ஈனும்।

கொடி ஆடுகள்:
மிக உயரமாக வளரக்கூடிய ஆடுகள்। இவை போரை ஆடு என அழைப்பதுமுண்டு।நீண்ட கழுத்தும், உயர்ந்த கால்களும் கொண்டதும், மெலிந்த உடலமைப்பு உடையதாகவும் இருக்கும்। ஆண், பெண் இரண்டுக்கும் கொம்பு இருக்கும்। வெள்ளை நிறத்தில் கறுப்பு புள்ளிகள் நிறைந்து காணப்பட்டால் அவை கரும்போரை என்றும், வெள்ள நிறத்தில் செந்நிறப் புள்ளிகள் நிறைந்து காணப்பட்டால் அவை செம்போரை என்று அழைக்கப்படும்।100செ।மீ உயரம், 85செ।மீ நீளமிருக்கும் கிடாக்களின் எடை40கிலோ இருந்து75 கிலோ வரை இருக்கும்। பெண் ஆடுகள் 80செமீ உயரம், 70செமீ நீளம் இருக்கும்।சராசரி எடை 35கிலோ இருக்கும்।வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு குட்டிகள் ஈனும்। மிக அரிதாக முன்று குட்டிகள் ஈனும்।
இந்த வகை ஆடுகள் தென் மாவட்டங்களில் காணப்படும்।குறிப்பாக கடற்கரை மாவட்டங்களில் அதிகமாக காணப்படும்।உயரமான கால்களை கொண்டிருப்பதால் நீண்ட தூரம் மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லலாம்।உடலின் நிறம் கடும் வெப்பத்தையும் தாங்கும்।இந்த வகை போரை ஆடுகள் திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் அதிக அளவில் காணப்படுகின்றன।மற்றபடி, தாஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, கடலூர் போன்ற மாவட்டங்களில் ஓர் சில இடங்களில் இவை காணப்படுகின்றன।
எந்த வகையிலும் கலப்பு செய்யப்படாத கொடி ஆடுகள் எட்டயபுரம், கோவில்பட்டி, புதூர், வேம்பாறு, நாகலாபுரம் பகுதிகளில் கிடைக்கும்। இந்த பகுதிகளில் காணப்படும் 90சதவிகிதம் வெள்ளாடுகள் கொடிஆடுகள் எனப்படும் போரை ஆடுகள்தான்।
வறட்சியை தாங்கி வளரக்கூடியது। வறட்சி மிக்கப் பகுதிகளில் சிரு மரங்கள் குத்துச் செடிகளின் மேல் முன்காலைத் தூக்கிப் போட்டு நிமிர்ந்து மேயும் போது, 7அடி உயரத்திலுள்ள த்ழையையும் தாவிப் பிடித்துவிடும்।வறட்சியின் காரண்மாகத் தரையில் தீவனம் இல்லாத சூழ்நிலையில் மரத்தின் இலை தழைகளை தீவனமாக் கொள்ளவே உயரமான கால்களும், நீண்ட கழுத்தும் இதற்கு உள்ளது।

சேலம் கறுப்பு:

இந்த வகை ஆடுகள் இன்னமும் காட்டுத் தன்மை போகாமல் இருக்கிறன। காட்டில் கூட்டமாக அலைந்து திரிந்து மேயவே ஏற்றவை। எந்த வகை ஆடுகளை வரை ஆடுகள் எனவும் குறிப்பிடுவார்கள்।எப்பொழுதும் 10முதல் 30ஆடுகள் என மந்தையகவே இருக்க விரும்பும்। பெயருக்கு ஏற்றது போல் உடல் முழுதும் கறுமை நிறம் கொண்டதாக இருக்கும்।கருமை நிறகொண்ட எல்ல ஆடுகளும் சேலம் கறுப்பாடு என கருதிவிட கூடாது। மெலிந்த உடலமைப்புக் கொண்டது।கொம்புகள் பின் நோக்கி வளைந்து இருக்கும்।இவ்வகை ஆடுகள் சேலம் மாவட்டம் ஓமலூர், மேச்சேரி பகுதிகளில் அதிகளவில் காணப்படுகின்றன।வேலூர் மாவட்டம் ஜவ்வாது மலை பகுதிகளிலும் அதனை ஒட்டிய மலை பகுதியிலும், திருவண்ணாமலை பகுதிலும் காணப்படுகின்றன।பொதுவாக ஒரு குட்டிதான் ஈனும், அரிதாக இரண்டு குட்டி ஈனும்।

பள்ளை ஆடு:
இதை சீனி ஆடு எனவும் அழைப்பதுண்டு। இவை மிக குட்டையான சிறிய இனம்। குட்டையான கால்களும், அகன்ற உடலமைப்பும் கொண்டவை। இந்த இன ஆடுகளுக்கு தனிப்பட்ட நிறம் கிடையாது। எல்லா நிறங்களிலும் காணப்படும்।குறிப்பாக கறுப்பு நிறத்திலும் அதனைச் சார்ந்த புள்ளி நிறத்திலும் காணப்படும்।இந்த வகை ஆடுகள் அதிக எண்ணிக்கையில் குட்டி ஈனும் ।ஓரே ஈத்தில் ஆறு, ஏழு குட்டிகள் கூட ஈனும்।பல ஈத்து ஆடுதான் பள்ளையாடு என்று அழைக்கப்பாடுவதாக கூறுவதுமுண்டு।

மேற்குறிபிட்ட நான்கு வகை ஆடுகள்தான் தமிழ் நாட்டில் காணப்படும் முக்கிய வெள்ளாட்டினமாகும்.

Tuesday, January 27, 2009

பெர்சியன் பூனைப் பற்றி சிறு குறிப்பு




பெர்சியன் பூனை பூர்வீகம் ஈரான் நாட்டைச்சேர்ந்த பெர்சியா என்ற ஊராகும்।16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிற்கு கொண்டு வரப் பட்டது.இது மிகவும் சாதுவானது। சிறு குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்றது।பூனை இனத்திலேயே மிகவும் சாது வானது। எந்த நிலையிலும், எவ்வளவு சீண்டினாலும் சினம் கொள்வதில்லை।மனிதர்களுடன் மிகவும் அண்டி வாழக்கூடியது।இதன் சினைக்காலம் 7-10 நாட்கள் வரை நீடிக்கும்। சினைக்கான அறிகுறி பொதுவாக இவற்றின் குரல் மிக சன்னமாக இருக்கும், ஆனால் சினைக்காலத்தில் ஒரு விதமான ஊளைச் சத்தமிடும், நாம் அருகில் சென்றால் மல்லாந்து படுத்து காலை தூக்கும், உடம்பை சுவற்றில் வைத்து தேய்க்கும்।இவற்றின் கர்ப்ப கால அளவு 62-65 நாட்களாகும்। 2லிருந்து 6குட்டிகள் வரை ஈனும் திறன் படைத்தவை। குட்டிபோட்டவுடன் கண்கள் மூடியிருக்கும்। கண் திறக்க 8லிருந்து 10நாட்களாகும்.45 நாட்கள் வரை தாய் பால் மட்டுமே உணவாகும்। பின்பு அதற்கென்று உள்ள உணவுகளை கொடுக்கலாம்। குட்டிகளுக்கென்றே தனி உணவு இதற்கென்று உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது।